அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கன்னிவாடி அருகே பெண்களை வீட்டுச் சிறையில் வைத்த 35 பேர் மீது வழக்கு

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே பெண்களை வீட்டுச் சிறையில் வைத்த 35 பேர் மீது வியாழக்கிழமை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 7:31 pm

DIN

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே பெண்களை வீட்டுச் சிறையில் வைத்த 35 பேர் மீது வியாழக்கிழமை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
 கன்னிவாடி அடுத்துள்ள எம்.நடுப்பட்டியைச் சேர்ந்த முருகன் மகள் மணிமேகலை (35). இவர் தனது தாயார் லட்சுமி, அக்காள் சந்திரா, தங்கை சுசீலா ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்களுக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு கும்பலுக்கும் நடைபாதை தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே கடந்த 24-ஆம் தேதி அக்கும்பல், மணிமேகலை வீட்டில், இருந்தவர்கள்அனைவரையும் வெளியே வரமுடியாத வகையில் சுற்றிலும் மூங்கில் கிடுகு வைத்து அடைத்துள்ளனர். இதனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவிர்த்துள்ளனர். மேலும் அக்கும்பல், ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்து சீமை ஓடுகளை அடித்து நொறுக்கி உள்ளது. 
இதுகுறித்து கன்னிவாடி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை மணிமேகலை அளித்த புகாரின் பேரில் போலீஸார், அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல், வெள்ளைச்சாமி, செல்வராஜ், கனகவள்ளி, ராஜேஸ்வரி என்ற மணி, முருகேஸ்வரி, செல்வி, பாப்பாத்தி, பஞ்சவர்ணம் உள்ளிட்ட 35 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.