ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமி

பிரதமர் மோடியை பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி விமர்சித்திருப்பது பற்றி...

பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி (கோப்புப்படம்)

Published On :10 மார்ச் 2026, 8:57 am IST

அமெரிக்காவுடன் பிரதமர் நரேந்திர மோடி சமரசம் செய்ததாக தனக்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்ட விவகாரத்தில் பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.

நாடாளுமன்றத்தில் அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியிலும் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக சுப்ரமணியன் சுவாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருக்கும் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

“நாட்டின் மூன்றாவது முறையாகப் பிரதமராகி இருக்கும் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார்?

எனக்குத் தெரிந்த அமெரிக்கர்கள், மோடி சமரசம் செய்து கொண்டதாகக் கூறுகிறார்கள். அந்த தகவல்களை வெளியிட்டால் பிரதமர் பதவியை மோடி ராஜிநாமா செய்ய வழிவகுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், தன்னிடம் தகவல்கள் இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Compromise with America! If information is released, Modi will have to resign! Subramanian Swamy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.