2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்பாளர்கள்! முதல் உலகத் தலைவர் மோடி!

மோடியின் இன்ஸ்டா 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்தது பற்றி...

மோடியின் இன்ஸ்டா 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்தது - Instagram | Modi

Published On :

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் என்ற சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைவிட இரண்டு மடங்கு அதிக பின்தொடர்பாளர்கள் இன்ஸ்டாகிராமில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக ஊடகப் பக்கத்தில் பிரதமர் மோடி கணக்கைத் தொடங்கினார்.

உலக அரசியல் தலைவர்களின் பிரதமர் மோடிக்கு அடுத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 4.32 கோடி பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளார்.

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவை 1.5 கோடி பேரும், பிரேசில் அதிபரை 1.44 கோடி பேரும், துருக்கி அதிபரை 1.16 கோடி பேரும், அர்ஜென்டினா அதிபரை 64 லட்சம் பேரும் பின்தொடர்கிறார்கள்.

பிரதமர் மோடிக்கு அடுத்த இடங்களில் உள்ள 5 உலக அரசியல் தலைவர்களின் மொத்த பின்தொடர்பாளர்களைவிட மோடியை அதிக பேர் பின்தொடர்கிறார்கள்.

இந்திய அளவிலும் மோடிக்கும் மற்ற அரசியல் தலைவர்களின் பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கைக்கும் நிறைய இடைவெளி இருக்கின்றது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை 1.61 கோடி பேரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை 1.26 கோடி பேரும் பின்தொடர்கிறார்கள்.

Summary

100 million followers on Instagram! Modi is the first world leader!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.