ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விவசாயி மீது தாக்குதல்:  2 பேருக்கு வலை

கொடைக்கானலில் புதன்கிழமை முன் விரோதம் காரணமாக தாக்கப்பட்டதில் விவசாயி பலத்த காயமடைந்தார். இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 12:15 am

DIN

கொடைக்கானலில் புதன்கிழமை முன் விரோதம் காரணமாக தாக்கப்பட்டதில் விவசாயி பலத்த காயமடைந்தார். இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 மன்னவனூரைச் சேர்ந்தவர் அறிவழகன். விவசாயி.  அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமியும், அறிவழகனின் மனைவியும் பழகி வந்தனராம். இதை அறிவழகன் கண்டித்துள்ளார். இந்நிலையில் அறிவழகனை,  ராமசாமியும், இவரது நண்பர் தவமுருகனும் சேர்ந்து கம்பால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அறிவழகன் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அறிவழகன் கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.