கொடைக்கானலில் சிறந்த சேவை செய்தவர்களுக்கு சுழற்சங்கம் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை ஏரிச்சாலையிலுள்ள உணவகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சுழற்சங்கத் தலைவர் ரோகன் சாம்பாபு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுழற்சங்க ஆளுநர் கோபாலகிருஷ்ணன், கொடைக்கானல் பகுதியில் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பெரா ஜான், கோடை சுத்தம் சமூக ஆர்வலர் அப்பாஸ், இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவித்து வரும் காவல்துறையைச் சேர்ந்த ஜான் ஆகிய 3 பேருக்கு விருதுகளை வழங்கிப் பேசினார். இதில் ரோட்டரி இன்ட்ராடிக் கிளப்பைச் சேர்ந்த பவான்ஸ் காந்தி வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்கள் சார்பில் ரூ.30 ஆயிரத்துக்கான காசோலை தமிழ்வழிக் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிக்கு கழிப்பறை கட்டுவதற்கு நிதியாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுழற்சங்க முன்னாள் ஆளுநர் சாம்பாபு, சுழற்சங்கத்தைச் சேர்ந்த ஆசாத், சுகுமார், ராமன் ராஜ்குமார், தனசேகர், ராபின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்காட்லாந்துக்கு எதிராக நெய்மர் 100% விளையாடுவார்..! பயிற்சியாளர் அன்செலாட்டி உறுதி!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

கச்சா எண்ணெய் விலை சரிவால் இந்தியப் பங்குச் சந்தை மீட்சி! சென்செக்ஸ் 790 புள்ளிகள் உயர்வு!!

முன்பே வா என் அன்பே வா! த்ரிஷாவின் புதிய வைரல் விடியோ!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


