பக்க விளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 17ஆயிரமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வரை 41 இடங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 2014 செப்டம்பரில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் பிரிவு தொடங்கப்பட்டது. ரூ.33 லட்சத்தில் புதிய கட்டடத்தில் செயல்பட்டு வரும் இந்த சிகிச்சைப் பிரிவில், நீராவி குளியல், நீர் சிகிச்சை, அக்கு பிரஷர், யோகா, தியானம், மண் சிகிச்சை, காந்த சிகிச்சை, எண்ணெய் மசாஜ், மெழுகு ஒத்தடம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் யோகா பயிற்சி மூலம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் கற்பிக்கப்படுகின்றன.
கடந்த 2015ஆம் ஆண்டு 8 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சைப் பெற்ற இம்மையத்தில், 2016ஆம் ஆண்டு அவர்களின் வருகை 11ஆயிரமாக உயர்ந்தது. இந்நிலையில் பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் யோகா, இயற்கை மருத்துவ முறையின் தாக்கத்தால், கடந்த 2017ஆம் ஆண்டு சிகிச்சைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 17ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர் கல்யாணி கூறியதாவது: மருந்து மாத்திரைகள், அறுவை சிகிச்சை இல்லாமல், பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் மூலம் சிகிச்சை அளிப்பதே இயற்கை மருத்துவம். நோய் எதிர்பாற்றலின் வெளிப்பாடாகவே காய்ச்சல், சளி, இருமல், தும்மல், வாந்தி, பேதி, வீக்கம், கொப்புலங்கள் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படுகின்றன.
இயற்கை மருத்துவ வாழ்வியல் முறையினை கடைபிடித்தாலே அந்த அறிகுறிகள் இயல்பாக சரியாகி விடும்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாழை இலை குளியல் மூலம் சிறுநீரகக் கோளாறு, தோல் நோய், மூட்டு வலி மற்றும் உடல் பருமனை சரி செய்ய முடியும். வாழை இலையை நோயாளிகளே வாங்கி வர வேண்டும். பொதுமக்களின் விழிப்புணர்வு காரணமாக, இயற்கை மருத்துவம் மேலும் வளர்ச்சி பெறும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு!

மிட்செல் சாண்ட்னர் ஒரு மாதம் கிரிக்கெட் விளையாட மாட்டார்: நியூசி. கிரிக்கெட் வாரியம்

ம.பி. படகு விபத்து; 9 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!

ரியோ ராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் அறிமுக போஸ்டர்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

