சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

ஒட்டன்சத்திரத்தில் கடைகளின்  பூட்டை உடைத்து பணம் திருட்டு

ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை இரவு மளிகை மற்றும் மருந்துக் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரத்தை திருடிய  மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:29 am

ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை இரவு மளிகை மற்றும் மருந்துக் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரத்தை திருடிய  மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் திருவள்ளுவர் சாலையில் மருந்துக்கடை வைத்திருப்பவர் கடற்கரை (45). ,அதே போல காய்கறி சந்தை சாலையில் மருந்துக்கடை வைத்திருப்பவர் திருமலைசாமி (60). ஒட்டன்சத்திரம்-வேடசந்தூர் சாலை சோதனைச்சாவடி அருகே மளிகைக்கடை வைத்திருப்பவர் ஜோசப் (40). 
இவர்களது கடைகளிலும், காமாட்சியம்மன் கோயில் எதிரே உள்ள மோட்டார் கடை மற்றும் செருப்புக் கடைகளிலும் சனிக்கிழமை இரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பணத்தை திருடிச் சென்று விட்டனர். இக்கடைகளில் ரூ.50 ஆயிரம் வரை திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.