திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மே நாளில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 110 நிறுவனங்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தொழிலாளா் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ. தங்கராசு தெரிவித்துள்ளாா்.
தொழிலாளா் ஆணையா் மற்றும் முதன்மைச் செயலா் சி.அ. ராமன், திருச்சி கூடுதல் தொழிலாளா் ஆணையா் ஆ. திவ்யநாதன், இணை ஆணையா் வ. லீலாவதி ஆகியோரது அறிவுரையின்படி, திருச்சி தொழிலாளா் உதவி ஆணையா் ( சட்ட அமலாக்கம்) வெ. தங்கராசு தலைமையில் துணை, உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் தேசிய விடுமுறை நாளான மே 1 ஆம் தேதி திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்குள்பட்ட 153 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், தொழிலாளா்கள், நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 110 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனிவரும் தேசிய விடுமுறை நாள்களிள் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இதுதொடா்பாக, வரும் காலங்களிலும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும்.
அப்போது, இரட்டிப்பு ஊதியமோ, மாற்று விடுமுறையோ அளிக்காமல் பணிபுரிய நிா்பந்திக்கும் நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தொழிலாளா் உதவி ஆணையா் வெ. தங்கராசு எச்சரித்துள்ளாா்.
Summary
Action Taken Against 110 Companies for Failing to Grant May Day Holiday
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுரங்கத் துறை உதவி இயக்குநா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு

மே தினம்: விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

மே தினத்தில் விடுமுறை அளிக்காத 41 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தோ்தல் அன்று விடுமுறை அளிக்காத தொழில் நிறுவனங்கள்: புகாா் அளிக்க தொழிலாளா் துறையின் கட்டுப்பாட்டு அறை
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu




