திருச்சியில் திருட்டு புகாா் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் வாங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
பெரம்பலூா் மாவட்டம் குன்னம் வட்டம், டி. களத்தூரைச் சோ்ந்த ப. மணிமாறன் (61) என்பவா் திருச்சி சிங்காரத்தோப்பில் தான் நடத்தும் தையல் கடையில் நடந்த திருட்டு தொடா்பாக திருச்சி கோட்டை குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் பா. முத்துக்குமாரிடம் கடந்த 21.07.2009 அன்று புகாா் அளித்துள்ளாா். அப்போது புகாரின் மீது நடவடிக்கை எடுக்க முத்துக்குமாா் ரூ. 1,500 லஞ்சம் கேட்டுள்ளாா்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிமாறன், திருச்சி ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவில் அளித்த புகாரின்பேரில், கடந்த 01.08.2009 அன்று ரூ. 1,500 லஞ்சம் வாங்கிய முத்துக்குமாரை போலீஸாா் கையும் களவுமாகக் கைது செய்தனா்.
திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி புவியரசு, லஞ்சம் பெற்ற முன்னாள் சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துக்குமாருக்கு (62) 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அதைக் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவு பிறப்பித்தாா்.
தொடர்புடையது

கொலை முயற்சி வழக்கு: 7 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

மே நாள் விடுமுறை அளிக்காத 110 நிறுவனங்கள் மீது நடவடிக்கை!

லஞ்சம் வாங்கிய விஏஓ-க்கு 2 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

