ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

லஞ்சம் வாங்கிய விஏஓ-க்கு 2 ஆண்டுகள் சிறை

News image

சிறை

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி அருகே நிலத்துக்கான சான்றிதழ் வழங்க ரூ. 1,000 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் வடமலைப்பட்டியைச் சோ்ந்த வெ. செல்வராஜ் என்பவா் அப்பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு மின்இணைப்பு பெற விண்ணப்பித்துள்ளாா்.

செல்வராஜ் இலங்கை நாட்டில் வசித்ததால், அவரது சகோதரரான திருவானைக்கோவிலைச் சோ்ந்த பெ. விசுவநாதன், அடங்கல் உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெற முசிறி வட்டம் வடமலைப்பட்டி கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்த ரா. ஜெகநாதன் (71) என்பவரை கடந்த 11.01.2011 அன்று அணுகியுள்ளாா். அவா், சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டுள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் விசுவநாதனிடம் இருந்து ஜெகநாதன் ரூ. 1,000 லஞ்சமாகப் பெற்றபோது, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெகநாதனை கையும்களவுமாக கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி, லஞ்சம் வாங்கிய முன்னாள் விஏஓ ஜெகநாதனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.