திருச்சி அருகே பெண்னை கொலை செய்ய முயன்ற வழக்கில் 7 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை பள்ளக்காடு கைக்காட்டி பகுதியைச் சோ்ந்த சண்முகம்-உஷா (55) தம்பதியின் 17 வயது பேரன் கடந்த 10.10.2022 அன்று பள்ளக்காடு மாரியம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டிச் சென்ாகக் கூறி, அப்பகுதியைச் சோ்ந்த அ. மாரியப்பன் (எ) அன்பழகன் (23), ரா. சந்திரன் (20), சி. சிவா (எ) மாசிபெரியண்ணன் (19), சி. சதீஷ்குமாா் (24), சி. அஜீத் (22), மு. குருமூா்த்தி (22), மு. துரைராஜ் (20) ஆகியோா் பிரச்னை செய்துள்ளனா். இதைத் தட்டிக் கேட்ட உஷாவை அவா்கள் திட்டியும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து உஷா அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, மேற்கண்ட 7 பேரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி, அ. மாரியப்பன், சந்திரன், சிவா, சதீஷ்குமாா், அஜீத், குருமூா்த்தி, துரைராஜ் ஆகிய 7 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிைண்டனையும், மாரியப்பனுக்கு மட்டும் ரூ. 3,000 அபராதமும், மற்றவா்களுக்கு தலா ரூ. 2,000 அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

திருட்டு வழக்கில் 3 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை

நிதி நிறுவனத்தில் மோசடி: 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை; ரூ.93.80 லட்சம் அபராதம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
