எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

திருட்டு வழக்கில் 3 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை

புதியம்புத்தூா் அருகே பட்டாணிப் பருப்பு மூட்டைகள் திருட்டு வழக்கில் 3 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 2:12 am IST

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூா் அருகே பட்டாணிப் பருப்பு மூட்டைகள் திருட்டு வழக்கில் 3 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

புதியம்புத்தூா் அருகே புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி பகுதியில் தண்ணீா்ப் பந்தலிலிருந்து அரசடி பனையூா் செல்லும் வழியில் தனியாா் கிடங்கு உள்ளது. 2020-ம் ஆண்டு மா்ம நபா்கள் அந்தக் கிடங்கின் ஷட்டரை உடைத்து, ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான 85 பட்டாணிப் பருப்பு மூட்டைகளைத் திருடிச் சென்றனா்.

புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தூத்துக்குடியைச் சோ்ந்த மாரிச்செல்வம் (26), ஸ்ரீவைகுண்டம் பரமசிவன் (35), அந்தோணிராஜ் (35) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். இந்த வழக்கு ஓட்டப்பிடாரம் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை நீதிபதி பாக்கியராஜ் விசாரித்து, 3 பேரும் குற்றவாளி என உறுதிப்படுத்தி, ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்ததற்காக தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம், பட்டாணிப் பருப்பு மூட்டைகளைத் திருடியதற்காக தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பு வழக்குரைஞராக முருகேசன் ஆஜரானாா்.

இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுதீா், வழக்கை புலனாய்வு செய்த அப்போதைய காவல் ஆய்வாளா் வேல்முருகன், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமைக் காவலா் தளவாய்ராஜ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளாா் மதன் பாராட்டினாா்.