திண்டுக்கல் மாவட்டத்தில் மெட்ரிக்குலேஷன், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 2,975 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச. கோபிதாஸ் தெரிவித்துள்ளது: 14 வயதுக்குள்பட்ட அனைத்து மாணவர்களும் கல்வி பெறவேண்டும் என்ற அடிப்படையில், 2013-14 ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, சிறுபான்மையினர் நிர்வாகத்தில் அல்லாத அனைத்து தனியார் பள்ளிகளிலும் நுழைவு வகுப்புகளில் 25 சதவீத இடம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
2018-19ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஏப்ரல் 20 முதல் மே 18ஆம் தேதி வரை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 91 மெட்ரிக். பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் 1,261 இடங்கள் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளன.
அதேபோல், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 125 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 1,714 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
எனவே, நலிவடைந்த மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டினை, தகுதிவாய்ந்த பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாடா ஸ்டீல் 4வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: அலுவலா்கள் ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மிதமான மழை

மன்னாா்குடியில் மிதமான மழை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
