கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியிலுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோயில் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இந் நிகழ்ச்சியில், கோயில் நிர்வாகத்தினர், விழாக் கமிட்டியாளர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவானது, தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
காளியம்மன் கோயிலில் மறுகால பூஜை: கொடைக்கானல் டோபிகானல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோயில் திருவிழா கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை மறுகால பூஜையை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதையொட்டி, டிப்போ பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
இந்த ஊர்வலமானது, ஏரிச்சாலை, செவன் ரோடு, அண்ணாசாலை, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி, லாஸ்காட் சாலை வழியாக கோயிலை அடைந்தனர். அங்கு, அம்மனுக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை, விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







