ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

நெகிழிப்பை ஒழிப்பு: சிறந்த அலுவலர்களுக்கு சான்று

நெகிழிப்பை ஒழிப்பில் சிறப்பாக செயல்படும் அலுவலர்களுக்கு சுதந்திர தின விழாவில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படும் என ஆட்சியர் டி.ஜி. வினய் தெரிவித்துள்ளார்.

Updated On :

நெகிழிப்பை ஒழிப்பில் சிறப்பாக செயல்படும் அலுவலர்களுக்கு சுதந்திர தின விழாவில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படும் என ஆட்சியர் டி.ஜி. வினய் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 4 மாதங்களில் நெகிழிப் பை ஒழிப்பு முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளது. அதற்கு முன்னோட்டமாக, அரசு அலுவலகங்களில் நெகிழிப் பை ஒழிப்பதை, தற்போது முதல் கடைப்பிடிப்பதை அனைத்து அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும். 
மாவட்ட நிலையில் உள்ள அலுவலர்கள், அந்தந்த துறைகளிலுள்ள கீழ் நிலை அலுவலகங்களுக்கு இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.  ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்கள் அலுவலகத்தை சுற்றிப்பார்த்து நெகிழிப் பை ஒழிப்பை கண்காணிக்க வேண்டும். அதேபோல் வெளியிலிருந்து வரும் நபர்களும், உணவு, திண்பண்டங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய வருவோரும், நெகிழிப் பை பயன்படுத்தாமல் இருப்பதற்கும் அறிவுறுத்த வேண்டும்.  திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டலத்திற்கு, நெகிழி ஒழிப்பு நடைமுறைப்படுத்த ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். 
ஒருமுறை பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பை மட்டுமின்றி, அனைத்து வகையான நெகிழி பைகளையும் தவிர்க்க வேண்டும். இதனை சிறப்பாக அமல்படுத்தும் அலுவலர்களுக்கு சுதந்திர தினத்தன்று சான்றிதழ் வழங்கி கௌவிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.