
அயன்கலையமுத்தூர் அக்ரஹாரம் கைலாசநாதர் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை
பழனியை அடுத்த அயன்கலையமுத்தூர் அக்ரஹாரம் கைலாசநாதர் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆடிலட்சார்ச்சனை நடைபெற்றது.
பழனியை அடுத்த அயன்கலையமுத்தூர் அக்ரஹாரம் கைலாசநாதர் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆடிலட்சார்ச்சனை நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி பிரதான சப்பரத்தில் கலசங்களில் புனித நீர் நிரப்பி ஆவாகனம் செய்யப்பட்டு, மலர்கள் தூவி பூஜை நடைபெற்றது.
சுவாமிநாத சிவாச்சார்யார் தலைமையில் யாககுண்டம் அமைக்கப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க யாகபூஜை நடைபெற்றது. இரண்டாம் நாளாக செவ்வாய்க்கிழமை வசூர்தாரா மூல ஹோமம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடைபெற்றது. முன்னதாக வடுகபூஜை, கன்யாபூஜை, சுமங்கலி பூஜை ஆகியன நடத்தப்பட்டன.
பூர்ணாஹூதியைத் தொடர்ந்து கலசங்களுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டு கலசங்கள் மேளதாளம் முழங்க கோயிலை வலம் வந்தன.
பின்னர் உச்சிக்காலத்தின் போது அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பால், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர் மாலைகள், பட்டாடை, நகைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






