நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

பழனியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் தள்ளுமுள்ளு

பழனியில் வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகளை

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

பழனியில் வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகளை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் சாலையிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனியில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நகராட்சி கழிவறை,  பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்ய தவறியதாக கூறி நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.  
இதன்படி நகர செயலாளர் தங்கவேல்,  நகர தலைவர் மாலதி ஆகியோர் தலைமையில் வியாழக்கிழமை பழனி பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு நகராட்சி அலுவலகத்தை நோக்கி  சென்றனர். அப்போது மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி,  முற்றுகை போராட்டத்துக்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மின்சார வாரிய அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள்  சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பல மணி நேரமாகியும் பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வராததால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து தீர்வு எட்டப்பட்டதால், காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.