
நூற்பாலையில் இளம்பெண் மர்மச் சாவு: சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரிக்கை
வேடசந்தூரில் தனியார் நூற்பாலையில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து சிபிசிஐடி விசாரணை
வேடசந்தூரில் தனியார் நூற்பாலையில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டுமென சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிஐடியு மாவட்டச் செயலர் கே.ஆர். கணேசன் புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்த விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த விஜயலட்சுமி(19), மர்மான முறையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பஞ்சாலைகளில் தொடர்ந்து விதிமீறல் நடைபெறுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
ஆனால், காவல்துறை முறையான விசாரணை நடத்தி தவறு செய்த ஆலை நிர்வாகத்தின் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நூற்பாலை பிரச்னையில், தொழிலாளர் நலத் துறையும் தலையிடுவது இல்லை. இதன் மூலம், நூற்பாலை நிர்வாகங்களின் விதிமீறல்களுக்கு காவல்துறையும், தொழிலாளர் நலத் துறையும் துணை நிற்பதாகவே தோன்றுகிறது.
பஞ்சாலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுதில்லை. வெளிமாவட்டங்களை சேர்ந்த இளம் பெண்களின் உழைப்பு, கேம்ப் கூலி என்ற பெயரில் சுரண்டப்படுகிறது.
எதிர்காலத்தில் நூற்பாலைகளில் இளம் பெண்களின் மர்ம மரணங்களை தடுக்கும் வகையில், வேடசந்தூர் நூற்பாலை நிர்வாகத்தின் மீது சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






