டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!தமிழக ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு! திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்! தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

வெள்ளியங்காடு - முள்ளி சாலையைக் கடந்த குட்டிகள்! அரணாக நின்ற காட்டு யானை நன்றி சொன்ன ஆச்சரியம்!

வெள்ளியங்காடு - முள்ளி சாலையை குட்டிகள் கடக்கும்போது அரணாக நின்ற காட்டு யானை நன்றி சொன்ன ஆச்சரியம் பற்றி..

காட்டு யானை

காட்டு யானை

Published On :25 ஆகஸ்ட் 2026, 5:02 pm IST

வெள்ளியங்காடு - முள்ளி சாலையை குட்டி யானைகள் பாதுகாப்பாக கடக்க அரணாக நின்று, சாலையில் வரும் வாகனங்களை வழிமறித்து நிறுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

தாய் பாசத்தில் மனிதர்களை விஞ்சிய காட்டு யானைகள் என அதனை நேரில் பார்த்தவர்களும் விடியோவில் பார்ப்பவர்களும் நெகிழ்ந்து போகின்றனர்.

காரமடை அருகேதான் இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கோவையில் இருந்து காரமடை வழியாக நீலகிரி மாவட்டத்திற்குச் செல்லும் வெள்ளியங்காடு - முள்ளிசாலை 3 வது வழித்தடமாக இருந்து வருகிறது. இச்சாலை வெள்ளியங்காடு பகுதியில் இருந்து தொடங்கி அடர் வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது. இதனால் வனவிலங்குகள் சாலையில் உலா வருவது வாடிக்கை.

எல் நினோ தாக்கத்தின் காரணமாக காரமடை வனச்சரக எல்லைக்குட்பட்ட இப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் இச்சாலையை கடந்து மறுபுறம் சென்று அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகின்றன.

மேலும்,இச்சாலையை ஒட்டி 20க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களும் உள்ளன. இதனால் பொது போக்குவரத்தான அரசு பேருந்துகளும் இச்சாலை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், நீலகிரி செல்லும் மக்களும் வாகன நெரிசல் இல்லாமல் செல்ல இச்சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் காரில் சென்ற நபர் ஒருவர் பில்லூர் அணை அருகே திடீரென சாலையில் ஒற்றை காட்டு யானை நிற்பதைக் கண்டு அதிர்ச்சியில் வாகனத்தை நிறுத்தி உள்ளார்.

தொடர்ந்து அவர் வாகனத்தை இயக்க முற்பட்டபோது அந்த யானை முன்னோக்கி வந்து வாகன ஓட்டியை மிரட்டுவது போல் வந்துள்ளது. இதனால் வாகன ஓட்டி அச்சத்தில் வாகனத்தை அதே இடத்தில் நிறுத்தி உள்ளார். அதே வேளையில் வனப்பகுதியில் இருந்து நான்கு குட்டி யானைகளும் வெளியேறி சாலையை கடந்துள்ளன.

குட்டி யானைகள் பாதுகாப்பாக சாலையை கடக்கும் வரை இந்த ஒற்றை காட்டு யானை அந்த வாகனத்தை வழிமறித்து நின்றுள்ளது. தொடர்ந்து குட்டி யானைகள் பாதுகாப்பாக சாலை கடந்து மறுபுறம் உள்ள வனப்பகுதிக்கு சென்றதை உறுதி செய்த பின்னர் சற்றுநேரம் அங்கிருந்த இலை, தழைகளை சாப்பிட்ட ஒற்றை காட்டு யானை மீண்டும் குட்டி யானைகளுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.

அதன்பின்னரே வாகன ஓட்டி நிம்மதியடைந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

தனது குட்டிகள் பாதுகாப்பாக சாலையை கடந்து செல்லும் வரை வாகனங்கள் ஏதும் குறுக்கிடாத வண்ணம் வாகனத்தை மறித்து ஒற்றை யானை நின்றதுடன் செல்லும் போது வாகன ஓட்டிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது துதிக்கையை உயர்த்தியும் காண்பித்தது.

காட்டு யானையின் இந்த நெகிழ்ச்சியான செயலை அந்த வாகனத்தில் பயணித்த பயணி ஒருவர் தனது செல்போனில் விடியோவாக பதிவிட்டு அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தாய் பாசத்தில் மனிதரை விஞ்சிய காட்டு யானையின் இச்செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

இதுகுறித்து காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில் "வெள்ளியங்காடு - முள்ளி சாலையில் பகல் வேளைகளில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மாலை 6 மணிக்கு மேல் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. வெள்ளியங்காடு சோதனைச்சாவடியிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

வறட்சி காரணமாக வனவிலங்குகள் அடிக்கடி இது போன்று கூட்டமாக சாலையை கடந்து செல்கின்றன. இதனால் மலைப்பாதையில் வாகனங்கள் பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும். வனவிலங்குகளை கண்டால் துன்புறுத்த கூடாது.

செல்ஃபி எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது. ஆபத்தாக முடியலாம். அதேபோல் தனியாகவோ, கூட்டமாகவோ சேர்ந்து வனவிலங்குகளை விரட்ட முற்படக்கூடாது. மீறினால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Summary

Cubs crossed the Velliyangadu-Mulli road! A wild elephant stood guard—an amazing moment of gratitude!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.