சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

பழனி அருகே மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

பழனி அருகே மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக அரசுப்பள்ளி ஆசிரியரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனர்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

பழனி அருகே மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக அரசுப்பள்ளி ஆசிரியரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள முல்லை நகரைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (45). இவர் கீரனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 
 இவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி வருவதாக கடந்த 5 நாள்களுக்கு முன்பு பழனி வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு தகவல் கிடைத்துள்ளது. 
 இதையடுத்து இக்குழு மேற்கொண்ட ஆய்வில் புகார் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சட்டப்பணிகள் குழு பரிந்துரையின் பேரில் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புதன்கிழமை ஆசிரியர் ஸ்டீபன்ராஜ் மற்றும் மாணவிகள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 
இதில் அவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியது தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் ஸ்டீபன்ராஜ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.