கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஒட்டன்சத்திரத்தில் எம்ஜிஆர் நினைவு தினம்

ஒட்டன்சத்திரத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 31 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On :25 டிசம்பர் 2018, 7:28 am IST

ஒட்டன்சத்திரத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 31 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
    இதையொட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றிய அதிமுக சார்பில், பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
     இந்நிகழ்ச்சிக்கு, அதிமுக ஒன்றியச் செயலர் பி. பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. குப்புச்சாமி, நகரச் செயலர் உதயம் ராமசாமி, தேவி குணசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஏராளமான அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
     இதேபோல், திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமமுக சார்பில், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலைய மேற்கு பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஒட்டன்சத்திரம் அமமுக நகரச் செயலர் தங்கதுரை, ஒன்றியச் செயலர்கள் சந்திரன், சண்முகவேல், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலர் ஜமாலுதீன் உள்பட அக்கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.