கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணங்கள் உயர்வா? என்பது குறித்து அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளதைப் பற்றி...

News image

திருச்செந்தூர் கோயில் - அமைச்சர் ரமேஷ்.

Updated On :24 ஜூன் 2026, 11:33 am IST

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன கட்டணங்கள் உயர்த்தப்பட்டனவா? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், விலைவாசி உயர்வு மற்றும் வருவாய் குறைவை ஈடு செய்ய சேவை மற்றும் சிறப்பு தரிசன கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அறிக்கை ஒட்டப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பில், “தங்கரத உலா கட்டணம் ரூ. 2,500-த்திலிருந்து ரூ. 5,000-ஆகவும் (வைப்பு நிதி ரூ. 50,000-லிருந்து ரூ. 1 லட்சமாகவும்), சண்முகார்ச்சனை கட்டணம் ரூ. 5,000-லிருந்து ரூ. 30,000-ஆகவும், 2 நபர்களுக்கான மூலவர் அபிஷேக கட்டணம் ரூ. 1,500-லிருந்து ரூ. 10,000 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.

இந்த கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் தங்களின் ஆட்சேபனைகளை வருகிற ஜூலை 7 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கோயில் நிர்வாகத்திற்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்” என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திருச்செந்தூர் கோயிலில் கட்டணம் உயர்த்தப்பட்ட சமூக வலைதளங்களில் செய்திகள் வேகமாக பரவிய நிலையில், இதற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், திருச்செந்தூர் கோயிலில் கட்டணம் உயர்த்தப்பட்ட என்பது குறித்து, சென்னை அம்பத்தூரில் அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அமைச்சர் ரமேஷ் பேசுகையில், “திருச்செந்தூர் கோயிலில் கட்டண உயர்வு எதுவுமில்லை. கோயிலில் 20-க்கும் மேற்பட்ட சேவைகள் நடைமுறையில் இருக்கின்றன. அந்த 20 சேவைகளும் அதே கட்டணத்தில்தான் நீடிக்கின்றன.

நிர்வாக ரீதியிலான சில முறைகேடுகள் இருந்தது நம்முடைய கவனத்துக்கு வந்தது. கட்டண உயர்வை அதிகாரிகள் ஏற்கெனவே பரிசீலித்து வைத்திருந்தனர். பொதுமக்களிடையே கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் கருத்தைப் பொறுத்தே தமிழ்நாடு அரசு செயல்படும்” என்றார்.

Summary

The Minister for Hindu Religious and Charitable Endowments, Ramesh, has issued a clarification regarding whether darshan fees at the Tiruchendur Murugan Temple have been increased.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.