நத்தத்தில் கோயில் கும்பாபிஷேகம்
நத்தம் கோவில்பட்டி பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


நத்தம் கோவில்பட்டி பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி நத்தம் அடுத்துள்ள சந்தனக்கருப்பு கோயிலிலிருந்து கடந்த வியாழக்கிழமை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், காவிரி, கங்கை, காசி, ராமேசுவரம் உள்ளிட்ட புண்ணிய நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தத்துடன், கோயில் கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு புனித தீர்த்தமும், பூஜை மலர்களும் வழங்கப்பட்டன. இதன் பின் பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ந.கோவில்பட்டி மேலத்தெரு கிராம மக்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...