தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தில் உள்நாட்டு அஞ்சல் உறை தட்டுபாடு

திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தில் உள்நாட்டு அஞ்சல் உறைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு மாணவர்கள் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:14 pm

DIN

திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தில் உள்நாட்டு அஞ்சல் உறைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு மாணவர்கள் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தனியார் கடை உரிமையாளர்கள், அஞ்சல் அலுவலகங்களிலிருந்து அதிக அளவில் உள்நாட்டு தபால் உறைகளைப் பெற்று விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தபால் நிலையங்களில் ரூ.2.50-க்கு விற்பனை செய்யப்படும் உள்நாட்டு அஞ்சல் உறை, வெளியிடங்களில் ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொலைவில் உள்ள தபால் நிலையங்களுக்கு செல்ல விரும்பாத பலர், கூடுதல் விலை கொடுத்து பெற்றுக் கொள்கின்றனர். 
 ஆனால், திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பள்ளிக்கு அருகிலேயே தலைமை தபால் நிலையம் அமைந்திருந்தும், பொதுமக்களுக்கு பயனில்லை என பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 2017-18 கல்வி ஆண்டு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், மாணவர்களிடம் உள்நாட்டு அஞ்சல் வழங்கும்படி பல்வேறு பள்ளி நிர்வாகங்களும் கேட்டு வருகின்றன. 
 இதற்காக தலைமை தபால் நிலையத்திற்கு செல்லும் பெற்றோர்கள், உள்நாட்டு அஞ்சல் கிடைக்காமல் கடந்த 3 நாள்களாக திரும்பிச் செல்வதாக கூறுகின்றனர்.
 இதுதொடர்பாக கோபால் நகரைச் சேர்ந்த கே.சாந்தி கூறுகையில், வங்கி சேவை, சேமிப்பு பத்திரம், தங்க முதலீடு என மாற்றுப் பாதையில் பயணிக்க தொடங்கியுள்ள தபால் நிலையங்கள், பிரதான பணியான அஞ்சல் சேவையிலிருந்து விலகிச் சென்றுவிட்டன. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டு அஞ்சல் உறை அதிக அளவில் விற்பனையாகும் என்பது தபால் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் தெரியும். ஆனாலும், கடந்த 3 நாள்களாக தலைமை தபால் நிலையத்தில் உள்நாட்டு அஞ்சல் உறை கிடைக்கவில்லை என்றார்.
இதுகுறித்து தலைமை தபால் நிலைய அலுவலர் ஒருவர் கூறியது: பள்ளி மாணவர்களை கருத்தில் கொண்டு தேவைப்பட்டியலை (இண்டன்ட்) அனுப்பி இருந்தால் தட்டுபாடு ஏற்பட்டிருக்காது. மதுரை அல்லது திருச்சி மண்டல அலுவலகத்திலிருந்து உடனடியாக உள்நாட்டு அஞ்சல் உறைகளைப் பெற்று விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.