டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆன்லைன் முறையில் தினமும் 1000 பத்திரங்கள் பதிவு: மதுரை மண்டல அதிகாரி தகவல்

மதுரை மண்டலத்தில் ஆன்லைன் முறையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் ஆயிரம் பத்திரப் பதிவுகள் நடைபெற்றுள்ளன என பதிவுத்துறை மதுரை மண்டல அதிகாரி சிவக்குமார் தெரிவித்தார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:06 am

DIN

மதுரை மண்டலத்தில் ஆன்லைன் முறையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் ஆயிரம் பத்திரப் பதிவுகள் நடைபெற்றுள்ளன என பதிவுத்துறை மதுரை மண்டல அதிகாரி சிவக்குமார் தெரிவித்தார்.
பழனி ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் உள்ள மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் புதன்கிழமை அவர் ஆய்வு மேற்கொண்டார். 
ஆய்வுக்குப் பின் பொதுமக்களுக்கான பத்திரப்பதிவுகளில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் குறித்து மாவட்டப் பதிவாளர் அருள்ஜோதி மற்றும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.  
அப்போது அவர் கூறியது: தமிழகத்தில் ஆன் லைனில் புதிய முறையில் பத்திரப்பதிவு துவங்கிய முதல் நாள் சர்வர் கோளாறு காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் 700 பத்திரங்கள் மட்டுமே பதிவானது.  இதையடுத்து பதிவுத்துறைத் தலைவர் தலைமையில் தொழில்நுட்ப நிபுணர்கள் குழு ஒரேநாள் இரவில் கோளாறை சரி செய்தனர்.  இதையடுத்து தற்போது பத்திரப்பதிவு சீராக உள்ளது. தமிழகத்திலேயே மதுரை மண்டலத்தில் புதிய முறை அமலுக்கு வந்தபின் நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் ஆயிரம் பத்திரப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. அலுவலக நடைமுறைகளில் மட்டுமே தாமதமாகி வருகிறது.  
ஆனால் இதற்கும் பொதுமக்கள் பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  சில மணி நேரங்களிலேயே பணி முடிவது பத்திரப்பதிவுத்துறையில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதை சில இடைத்தரகர்கள் வேண்டுமென்றே பூதாகரமான பிரச்னையாக கூறி வருகின்றனர்.  
 பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தின் லிப்ட்டை சரி செய்ய ரூ.75 ஆயிரம் நிதியை பொதுப்பணித்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.  விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.