வத்தலகுண்டு பகுதியில் ஆசிரியர் வீடுகளில் தொடரும் திருட்டு
வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் வீடுகளில் தொடர்ந்து நகை மற்றும் பணம் திருடு போகும் நிலையில், குற்றவாளிகளை


வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் வீடுகளில் தொடர்ந்து நகை மற்றும் பணம் திருடு போகும் நிலையில், குற்றவாளிகளை பிடிக்காத போலீசாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. இவர், விராலிப்பட்டி அடுத்துள்ள பண்ணைப்பட்டி அரசு பள்ளயில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பள்ளியிலிருந்து புதன்கிழமை வீட்டிற்கு சென்ற ஜீவா, பீரோவை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதுகுறித்து வத்தலகுண்டு காவல் நிலையத்தில் ஜீவா அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே தலைமையாசிரியர் வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவத்திற்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி அசிரியர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் மாநில அமைப்பு செயலர் க.ஜெயராமன் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக வத்தலக்குண்டு பகுதியில் உள்ள ஆசிரியர்கள் வீடுகளை குறி வைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர். குறிப்பாக, காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ரவிச்சந்திரன் என்பவரது வீட்டில் 65 பவுன் நகை திருடு போன சம்பவத்தில், போலீசார் இதுவரை குற்றவாளிகளை கைது செய்துவில்லை. அதன் தொடர்ச்சியாக, பள்ளி செல்லும் ஆசிரியர்களின் வீடுகளை குறி வைத்து தொடர்ந்து பல திருட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
தலைமையாசிரியர் வீட்டில் பணம் மற்றும் நகைகளை திருடிய குற்றவாளிகளை போலீசார் துரிதமாக கைது செய்யவில்லை எனில், ஆசிரியர்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...