தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

குடிநீர் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்துள்ள பச்சமலையான்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட எஸ்.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த

News image
Updated On :9 ஜூலை 2018, 7:28 pm

DIN

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்துள்ள பச்சமலையான்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட எஸ்.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனர்.       
    இதுதொடர்பாக அவர்கள் கூறியது: பச்சமலையான்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட 5 கிராமங்களுக்கு, எஸ்.புதுக்கோட்டை வழியாக காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. ஆனால், 1500 பேர் வசித்து வரும் எங்கள் கிராமம், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இதுதொடர்பாக நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டபோது, எஸ்.புதுக்கோட்டை கிராமம் இணைக்கப்படும் என தெரிவித்தார். ஆனால், இணைப்பதற்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வரும் எங்கள் கிராமத்தை, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இணைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
பிள்ளையார் நத்தம்:  இதேபோல், பிள்ளையார்த்தம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் முறையான குடிநீர் வசதி கேட்டு மனு அளிக்க வந்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு ஆத்தூர் காமராஜர் அணையிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்ற பின்னர், எங்கள் கிராமத்திற்கான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 
 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், நாங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளோம். எனவே, ஆத்தூர் நீர்த்தேக்கத்திலிருந்து வழங்கப்படும் குடிநீரை, வாரத்திற்கு ஒருமுறையாவது வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.