போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கொடைக்கானல் அருகே குட்டி யானை சாவு

கொடைக்கானல் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த குட்டி யானையை, வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர். 

Updated On :9 ஜூலை 2018, 1:35 am

கொடைக்கானல் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த குட்டி யானையை, வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர். 
    கொடைக்கானல் அருகே புலியூர் ஒத்தமர செட் வனப் பகுதியில் யானை இறந்து கிடப்பதாக, வனத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, கால்நடை மருத்துவர் ஹக்கிம் உள்பட 25-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் சென்றனர். 
அங்கு, பெண் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர்.    ஐந்து வயதுடைய இந்த யானை இறந்து சுமார் 10 நாள்கள் இருக்கும் என்றும், இது நோயுற்று இறந்ததா அல்லது மர்மமான முறையில் இறந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என, வனத் துறையினர் தெரிவித்தனர். 
   அதைத் தொடர்ந்து, மருத்துவர் ஹக்கிம் பிரேதப் பரிசோதனை நடத்திய பின், யானை அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.