பழனியில் நகராட்சி நிர்வாகத்துக்கு முறையாக வரி செலுத்தாமல் நடத்தப்பட்டு வரும் தனியார் காய்கறி சந்தையை மூட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி இட்டேரி சாலையில் நகராட்சி சார்பில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு, தினமும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது விளைபொருள்களை கொண்டு வந்து வியாபாரம் செய்து வந்தனர்.
இந் நிலையில், பராமரிப்புப் பணி காரணமாக இந்த சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. எனவே, தனியார் இடத்தில் காய்கறி கடை நடத்த அனுமதிக்கப்பட்டது. அதன்பேரில், நகரின் மத்தியில் முஸ்லிம் அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தில் இந்தக் கடைகள் திறக்கப்பட்டன.
அதன்பின்னர், பராமரிப்புப் பணிகள் முடிந்து நகராட்சி காய்கறி சந்தை திறக்கப்பட்டும், தனியார் இடத்திலிருந்து கடைகள் இடம் மாறவில்லை. இதனால், நகராட்சி காய்கறி சந்தையில் இருந்த 25 கடைகளில் 3 கடைகள் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன. இது, நகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நகராட்சி நிர்வாகத்துக்கு தனியார் காய்கறி சந்தை நிர்வாகம் கட்டணம் செலுத்தவில்லை என்பதாலும், தனியார் இடத்தில் இயங்கும் சந்தைக்கு தடை விதிக்கக் கோரி, நகராட்சி நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியது. இதற்கு தடை கோரி, தனியார் சந்தை நிர்வாகிகளும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
பல்வேறு கட்ட விசாரணைகளின் முடிவில், சென்னை உயர் நீதிமன்றம் தனியார் சந்தையிலுள்ள கடைகளுக்கு சீலிடுமாறு நகராட்சிக்கு உத்தரவிட்டது. அதன்படி, நகராட்சி நிர்வாக அரசு செயலரும் தனியார் சந்தை கடைகளை அடைக்க உத்தரவிட்டார்.
எனவே, செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) தனியார் சந்தை கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீலிட உள்ளதால், வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

