தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முதல் வியாபாரிகள் வரை 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக கூறி 300 நாணயங்களுடன் தொழிலாளி ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் அளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை அடுத்துள்ள செட்டியப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வி.சுப்பிரமணி. இவர் 300 பத்து ரூபாய் நாணயங்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.
ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் சோதனையிட்ட போலீசார், நாணயங்களுடன் வந்த சுப்பிரமணியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறியது: நான் கூலி வேலை செய்து, கடந்த பல நாள்களாக ரூ.10 நாணயத்தை சேமித்து வந்தேன். தற்போது 300 நாணயங்கள் சேர்ந்ததை அடுத்து, அதனை மாற்றுவதற்காக சின்னாளப்பட்டி பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றபோது, நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். அதேபோல், வியாபாரிகளும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு, என்னிடமுள்ள 300 பத்து ரூபாய் நாணயங்களை வங்கி நிர்வாகம் வாங்குவதற்கு, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
நாகம்பட்டி பொதுமக்கள் மனு:
தாமரைப்பாடி கிராமச் சாலையில், இந்திய உணவுக் கழக சேமிப்பு கிடங்கியிலிருந்து சரக்குகளை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள் இயக்குவதற்கு தடை விதிக்க கோரி நாகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், திண்டுக்கல் அடுத்துள்ள தாமரைப்பாடி ரயில் நிலையம் அருகே, இந்திய உணவுக் கழகம் சார்பில் சேமிப்பு கிடங்கி கட்டப்பட்டுள்ளது. இந்த கிடங்கில், வெளி மாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் கொண்டு வரப்படும் உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்படுகின்றன. பின்னர், திண்டுக்கல் திருச்சி 4 வழிச்சாலையிலிருந்து தாமரைப்பாடிக்கு செல்லும் கிராமச் சாலையை கனரக வாகனங்கள் பயன்படுத்துகின்றன.
ஒரு வாகனம் செல்லும் போது, எதிர்திசையில் மற்றொரு வாகனம் பயணிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், கனரக வாகனங்கள் வரும்போது, பள்ளிச் செல்லும் குழந்தைகள் முதல் இருசக்கர வாகனங்களில் பயணிக்க கூடிய பொதுமக்கள் வரை பாதிக்கப்படும் நிலை உள்ளது. குறிப்பாக, தாமரைப்பாடி, நாகம்பட்டி, செட்டியபட்டி, அண்ணாநகர், புதுகளராம்பட்டி, வேல்வார்கோட்"டை, காணப்பாடி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த சாலையில் 2 அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஒரு நடுநிலைப் பள்ளி உள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி, இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாளை காஞ்சிபுரம் வருகை

புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி மாணவா் சோ்க்கைகான விண்ணப்பம் விநியோகம்

மக்களை மையப்படுத்தியே நிா்வாக முடிவுகள்! இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமா் அறிவுறுத்தல்

சீன இறக்குமதியை சாா்ந்தே இந்திய மருந்து உற்பத்தித் துறை: நீதி ஆயோக்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


