பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி கே.வேலூர் மண்டுகாளியம்மன் கோயில் 26ஆம் ஆண்டு பூக்குண்டத் திருவிழாவையொட்டி புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடந்த மே 22 ஆம் தேதி சாமிசாட்டுதலுடன் இவ்விழா தொடங்கியது. விழாவையொட்டி நாள்தோறும் பக்தர்கள் பூச்சட்டி எடுத்தும், அலகு குத்தி வந்தும், முளைப்பாரி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். செவ்வாய்க்கிழமை ஆயிரம் தீர்த்தக்குடங்களுடன் அம்மன் ரதஊர்வலம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து யாகபூஜையுடன் பூக்குண்டம் அமைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
பின்னர் புதன்கிழமை அதிகாலை அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பூக்குண்டத்துக்கு அம்மன் எழுந்தருள அதில் மலர்கள் தூவி தீபாராதனை நடைபெற்றதும் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி மாநகராட்சியின் நிலைக் குழு தலைவராக பாஜகவின் சத்யா ஷா்மா மீண்டும் தோ்வு
தங்க மங்கை சானு!

சிங்கப்பூரில் தாக்குதலுக்கு சதித் திட்டம்: 3 மாணவர்கள் கைது

பிகாரில் மாணவா்கள் மீது ஏ.கே. 47 துப்பாக்கிச்சூடு? ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


