புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

நத்தம்-மதுரை 4 வழிச்சாலை திட்டம்: மக்கள் எதிர்ப்பால் 1.5 கி.மீட்டர் நிலத்தை கையகப்படுத்த முடியாமல் அதிகாரிகள் தவிப்பு

நத்தம் மதுரை 4 வழிச்சாலை திட்டத்திற்கு  வத்திப்பட்டி கிராமத்தினரின் எதிர்ப்பு காரணமாக 1.5 கி.மீட்டர் நீளத்திற்கான நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

Updated On :29 மார்ச் 2018, 7:57 pm

நத்தம் மதுரை 4 வழிச்சாலை திட்டத்திற்கு  வத்திப்பட்டி கிராமத்தினரின் எதிர்ப்பு காரணமாக 1.5 கி.மீட்டர் நீளத்திற்கான நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
மதுரையிலிருந்து நத்தம் வழியாக துவரங்குறிச்சி வரை 4 வழிச்சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், மதுரை முதல் நத்தம் வரையிலான மொத்தமுள்ள 36.43 கி.மீட்டர் தூரத்தில், மதுரை முதல் செட்டிக்குளம் வரை 7.3 கி.மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. செட்டிகுளம் முதல் நத்தம் வரையிலான 29.1 கி.மீட்டர் நீளத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதியிலும் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்துள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள வத்திப்பட்டி(ரெட்டியப்பட்டி) பகுதியில் மட்டும் 1.5 கி.மீட்டர் நீளத்திற்கான நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட தனி வருவாய் அலுவலர்(நில எடுப்பு) லதா, வட்டாட்சியர் கேசவன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள், நிலம் அளவீடு செய்வதற்காக வத்திப்பட்டி கிராமத்திற்கு வியாழக்கிழமை சென்றனர்.
ஆனால், நிலம் அளவிடுவதற்கு அந்த பகுதியில்  வசித்து வரும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் அளவீடு செய்யும் பணிகளை முடித்துக்  கொள்வதகாவும், அதன்பிறகு மாவட்ட நிர்வாகத்துடன் பேசி தீர்வு காண்பதாகவும் அதிகாரிகள் அளித்த விளக்கத்தை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர். 
 ஒரு வீட்டில் போலீசாரின் உதவியுடன் அளவீடு செய்வதற்கு அதிகாரிகள் முயன்றபோது,  அந்த வீட்டைச் சேர்ந்த குபேரன் மனைவி விசாலாட்சி(27) சமையல் எரிவாயு உருளையை திறந்துவிட்டு தற்கொலை செய்தவாக மிரட்டினார். 
அதேபோல், மற்றொரு வீட்டைச் சேர்ந்த மு.மதன்(49) என்பவர்  மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க போவதாகவும் மிரட்டினார். இதனால் அதிர்ச்சி  அடைந்த அதிகாரிகள்  நிலத்தை அளவிட முடியாமல்  திரும்பிச் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.