திண்டுக்கல்லில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் சவேரியார்பாளையம் ஜீவாநகரைச் சேர்ந்தவர் செ.அருண் (34). இறைச்சிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தனசீலி (30). காதல் திருமணம் செய்த இத்தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே தனசீலியின் நடத்தையில் அருணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, தனது குழந்தைகள் மற்றும் தாய் புஷ்பாவுடன் தனசீலி வசித்து வந்தார். மேலும், வருமானத்துக்காக பழைய இரும்புக் கடைக்கு தனசீலி வேலைக்கு சென்று வந்தார். இதனை விரும்பாத அருண், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக கடந்த 15 நாள்களுக்கு முன் தனசீலி, திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், மது அருந்திவிட்டு வந்து அருண் தொந்தரவு செய்வதாக தெரிவித்திருந்தாராம்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை வேலைக்கு செல்வதற்காக, நன்னப்பாநகர் வழியாக நடந்து சென்ற தனசீலியை, அருண் வழிமறித்து கத்தியால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து அங்கு வந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸார், தனசீலியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய அருணையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரியாறு அணை நீா்மட்டம் சரிவு: 5 மாவட்டங்களின் குடிநீருக்கு சிக்கல்

ராமநாதபுரம், கமுதி தொகுதிகளில் கே.அண்ணாமலை வாக்கு சேகரிப்பு!

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: ஸ்ரீ ராஜ ராஜன் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

