செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

லாரி மீது சொகுசுப் பேருந்து மோதல்: 5 பேர் காயம்

நத்தம் அருகே திங்கள்கிழமை நின்று கொண்டிருந்த லாரி மீது சொகுசுப் பேருந்து மோதியதில், 5 பேர் காயமடைந்தனர்.

Updated On :14 மே 2018, 7:08 pm

நத்தம் அருகே திங்கள்கிழமை நின்று கொண்டிருந்த லாரி மீது சொகுசுப் பேருந்து மோதியதில், 5 பேர் காயமடைந்தனர்.
கோவையிலிருந்து, திண்டுக்கல், நத்தம் வழியாக காரைக்குடிக்கு திங்கள்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்தில் 42 பேர் பயணம் செய்தனர். இப்பேருந்து நத்தம் அடுத்துள்ள அம்மாபட்டி விலக்கு அருகே சென்றபோது, செங்கல் பாரத்துடன் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது.
இதில், பேருந்தில் பயணம் செய்த காரைக்குடியைச் சேர்ந்த விஜய்கார்த்திக் (40), தேவகோட்டை அடுத்துள்ள தத்தனியைச் சேர்ந்த கலா (31), கனிஷ்கா (13), பானுப்பிரியா (22), ஹரிணி (8) ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து இவர்கள் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் விஜய்கார்த்திக் மட்டும் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். இவ்விபத்து குறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.