ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கால்நடைகளின் நலன் வேண்டி 500 ரேக்ளா வண்டிகளில் பழனிக்கு வந்த கிராம மக்கள்

கால்நடைகளின் நலன் வேண்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு திங்கள்கிழமை 500 ரேக்ளா வண்டிகளில் வந்து சுற்றுவட்டார கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On :21 மே 2018, 11:04 pm

கால்நடைகளின் நலன் வேண்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு திங்கள்கிழமை 500 ரேக்ளா வண்டிகளில் வந்து சுற்றுவட்டார கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கடந்த மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியதை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கைலாசநாதருக்கு சீதகும்பம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சித்திரை மாதத்தின் கடைசி ஏழு நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் ஏழு நாட்களும் பழனி கிரி வீதியில் மூலிகை காற்று வீசுவதாகவும், இதை நுகர்வதால் நோய்கள் நீங்குவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் இந்த நாள்களில் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரி வலம் வந்து பழனியாண்டவரை தரிசனம் செய்தனர்.
இதில் கடைசி கிரிவல நாளான திங்கள்கிழமை பழனியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் மாட்டு வண்டி பூட்டி வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதனால் கால்நடைகள் நோயின்றி வாழ்வதாகவும், விவசாயம் செழிப்பதாகவும் கூறுகின்றனர்.
இதையொட்டி திங்கள்கிழமை ஆண்டிபட்டி, பூளவாடி, பாலப்பம்பட்டி, கல்லாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டி, ரேக்ளா வண்டி, குதிரை வண்டிகளில் குவிந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து ஊர் திரும்பினர். ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு ஏராளமான வண்டிகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.