பழனியை சேர்ந்த சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் சனிக்கிழமை இரவு காலமானார்.
பழனியை அடுத்த ஆயக்குடியை சேர்ந்தவர் சின்னப்பராஜ் மகன் விஜயராஜ் (43). இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு ஐஸ்வர்யா (8) என்ற மகள் உள்ளார். விஜயராஜ் சின்னத்திரை நாடகங்களில் நடித்து புகழ் பெற்றவர். மெட்டி ஒலி, நாதஸ்வரம், கோலங்கள் என ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன் பழனி வந்த விஜயராஜ் சனிக்கிழமை இரவு மாரடைப்பால் இறந்தார்.
அவரது உடலுக்கு ஏராளமான உறவினர்கள், சின்னத்திரை இயக்குநர் திருமுருகன் உள்பட நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர். ஞாயிற்றுக்கிழமை மாலை இவரது உடல் ராமநாத நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள், பைக் பறிமுதல்: வியாபாரி கைது

நாளைய மின் தடை: கொளத்தூா்

இரு சக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் பலி

கேரளத்தில் நிபா வைரஸ் பரவல்: போடி சோதனைச் சாவடியில் சுற்றுலா வாகனங்கள் ஆய்வு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


