வேடசந்தூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 13 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமைடந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் நோக்கி ஆம்னி பேருந்து வந்து கொண்டிருந்தது. சேலம் மதுரை 4 வழிச்சாலையில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்துள்ள கருக்காம்பட்டி பிரிவு அருகே பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தபோது, சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பெங்களூருவைச் சேர்ந்த சாமுண்டிவேல்(65), அனில் ஜோசப்(50), முகமது(25), தாமஸ்(26) உள்பட 13 பேர் காயமடைந்தனர். காயமைடந்தவர்கள் மீட்கப்பட்டு, வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வேடசந்தூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


