அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு!
/

ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம்

ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலைக்காக மேம்பாலம் கட்டும் பணி தொடக்கப்பட்டுள்ளது.

Updated On :8 அக்டோபர் 2018, 7:45 am IST

ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலைக்காக மேம்பாலம் கட்டும் பணி தொடக்கப்பட்டுள்ளது.
     திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வழியாக பழனி,திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே போல ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் எதிரே காய்கறி சந்தை உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
 இதனால், மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை மூலம் ரூ.159 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கும் பணி கடந்த டிசம்பர் 7 இல் தொடங்கப்பட்டது. 
  அதன்படி, லெக்கையன்கோட்டை, அத்திக்கோம்பை, காளாஞ்சிப்பட்டி, ஒட்டன்சத்திரம், அரசப்பிள்ளைபட்டி வழியாக 10.1 கி.மீ. தொலைவுக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
 இதில், 2 ரயில்வே மேம்பாலங்கள், வேடசந்தூர் சாலை, தாராபுரம் சாலையை கடக்க இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன் ஒரு பகுதியாக வேடசந்தூர் சாலையில் காளாஞ்சிபட்டி அருகே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் இப்பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.