வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
திண்டுக்கல் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் எல்காட் நிர்வாக இயக்குநர் எம்.விஜயகுமார் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் டி.ஜி.வினய் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சியினர், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதனை எளிமைப்படுத்த வேண்டும். அதேபோல், இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கு இறப்பு சான்றிதழை கேட்கின்றனர். அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் இறப்புக்கான பதிவு இருக்கும் என்பதால், அதன் அடிப்படையில் இறந்த வாக்காளர்களின் பெயர்களை அலுவலர்களே நீக்க உத்தரவிட வேண்டும்.
அதேபோல், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு, கல்லூரிகளுக்கு அரசு அலுவலர்கள் நேரடியாக சென்று முகாம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!

தைரியம் கூடும் மகர ராசிக்கு: இன்றைய ராசி பலன்கள் (மே 31)
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


