அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

பெத்தேல்புரம்-சிறுவாட்டுக்காடு சாலையை சீரமைக்க கோரிக்கை

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள வடகாடு ஊராட்சிக்குட்பட்ட பெத்தேல்புரம்-சிறுவாட்டுக்காடு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள வடகாடு ஊராட்சிக்குட்பட்ட பெத்தேல்புரம்-சிறுவாட்டுக்காடு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகாடு ஊராட்சிக்கு உள்பட்ட சிறுவாட்டுக்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.  இந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் மலைப்பகுதியில் உள்ள வாழை மற்றும் ஆரஞ்சு, காப்பி தோட்டங்களில் வேலை செய்து வருகின்றனர்.  அதே போல அவர்கள் மலைப்பகுதியில் விளைந்த பொருள்களை விற்பனைக்காக ஒட்டன்சத்திரம்,வத்தலக்குண்டு,திண்டுக்கல் போன்ற நகரங்களுக்கு கொண்டு வருகின்றனர். இவர்களுக்காக வனத்துறை அனுமதி பெற்று கடந்த சில ஆண்டுக்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம்-பாச்சலூர் பிரதான சாலையில் பெத்தேல்புரத்தில் இருந்து சிறுவாட்டுக்காடு கிராமத்திற்கு சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்ச் சாலை அமைக்கப்பட்டது. 
இந்த சாலையானது மழை வெள்ளத்தால் அரிப்பு ஏற்பட்டு மண் சாலையாக மாறிவிட்டது. இதனால் இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.