அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.8 லட்சத்துக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

நிலக்கோட்டை அடுத்துள்ள சித்தர்கள்நத்தம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 154 பயனாளிகளுக்கு

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

நிலக்கோட்டை அடுத்துள்ள சித்தர்கள்நத்தம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 154 பயனாளிகளுக்கு ரூ.8.14 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வினய் புதன்கிழமை வழங்கினார்.
    திண்டுக்கல் மாவட்டம், அணைப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட சித்தர்கள்நத்தம்  கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். கோட்டாட்சியர் ஜீவா முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் வினய் பேசியதாவது:
 பொதுமக்களின் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட தேவைகளை மேம்படுத்தவும், நலத்திட்டங்களை பெறுவதற்கும் தங்கள் பகுதியிலுள்ள அலுவலர்களிடம் மனு அளிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தோ, 7598866000 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலோ புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
  முன்னதாக பல்வேறு துறைகளின் சார்பில் 154 பயனாளிகளுக்கு ரூ.8.14 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வினய் வழங்கினார்.  முகாமில் நிலக்கோட்டை வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.