பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

மினுக்கம்பட்டி, பாப்பம்பட்டி பகுதிகளில் செப்டம்பர் 14 மின்தடை

வேடசந்தூர் அடுத்துள்ள மினுக்கம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (செப். 14) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published On :

வேடசந்தூர் அடுத்துள்ள மினுக்கம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (செப். 14) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் காளிமுத்து கூறியிருப்பதாவது: மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை(செப்.14) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, ஐய்யர்மடம், குறும்பப்பட்டி, எஸ். குட்டம், ஆசாரிபுதூர், எஸ்.சுக்காம்பட்டி, கொன்னம்பட்டி, எஸ்.கே.புதூர், கோட்டைமேடு, வி.புதுக்கோட்டை ஆகிய இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
பழனி: பழனியை அடுத்த பாப்பம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பழனிக் கோட்ட செயற்பொறியாளர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை: பழனி கோட்டத்துக்குள்பட்ட பாப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வி.பி.புதூர், தாதநாயக்கன்பட்டி மற்றும் கரடிகூட்டம் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.