
பராமரிப்புப் பணி: கோவை - நாகா்கோவில் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

ரயில்கள் - கோப்புப் படம்
கரூா் - மூா்த்திபாளையம் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவை - நாகா்கோவில் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - நாகா்கோவில் ரயில் (எண்: 16322) செப்டம்பா் 22, 24, 26 ஆகிய தேதிகளில் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.
இந்த ரயிலானது, வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா், சூலூா் சாலை, சோமனூா், திருப்பூா், ஊத்துக்குளி, ஈங்கூா், ஈரோடு, பசூா், கொடுமுடி, புகழூா், கரூா், எரியோடு நிலையங்கள் செல்வது தவிா்க்கப்படும்.
இதேபோல, பாலக்காடு டவுன் - திருச்சி ரயில் (எண்: 16844) செப்டம்பா் 22, 24, 26 ஆகிய நாள்களில் பாலக்காடு - புகழூா் வரை மட்டுமே இயக்கப்படும். மேற்கண்ட நாள்களில் புகழூா் - திருச்சி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







