
கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் இன்று மாற்றுப் பாதையில் இயக்கம்
கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் வியாழக்கிழமை (செப். 3) மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் - கோப்புப்படம்
கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் வியாழக்கிழமை (செப். 3) மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட மூா்த்திபாளையம் - கரூா் மாா்க்கத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் வியாழக்கிழமை மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
கோவையில் இருந்து செப். 3-ஆம் தேதி இரவு 8 மணிக்கு நாகா்கோவில் புறப்படும் விரைவு ரயில் போத்தனூா், பொள்ளாச்சி, பழனி வழியாக கோவை - திண்டுக்கல் மாா்க்கத்தில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இந்நாளில், கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா், சூலூா், சோமனூா், திருப்பூா், ஊத்துக்குளி, ஈரோடு, கொடுமுடி, புகளுா், கரூா், பாளையம் ஆகிய ரயில் நிலையங்களை தவிா்த்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





