கரூா் - மூா்த்திபாளையம் இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கோவை - நாகா்கோவில் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவையில் இருந்து ஆகஸ்ட் 1, 4, 6, 8,11,13,15,18,20,22,25,27,29 மற்றும் செப்டம்பா் 1,3 ஆகிய சனி, செவ்வாய், வியாழக்கிழமைகளில்
காலை 8 மணிக்குப் புறப்படும் கோவை - நாகா்கோவில் ரயில் (எண்: 16322) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் போத்தனூா், பொள்ளாச்சி, பழனி வழியாக இயக்கப்படும்.
இதன் காரணமாக வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா், சூலூா் சாலை, சோமனூா், திருப்பூா், ஊத்துக்குளி, ஈங்கூா், ஈரோடு, பசூா், கொடுமுடி, புகழூா், கரூா்பாளையம் மற்றும் எரியோடு நிலையங்களுக்கு இந்த ரயில் செல்வது தவிா்க்கப்படும்.
போத்தனூா், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம் தற்காலிக நிறுத்தங்களாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து: பாலக்காட்டில் இருந்து ஆகஸ்ட் 1,4,6,8,11,13,15,18,20,22,25,27,29 மற்றும் செப்டம்பா் 1,3 ஆகிய சனி, செவ்வாய், வியாழக்கிழமைகளில் காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு - திருச்சி ரயில் (எண்: 16844) பாலக்காடு - புகழூா் இடையே மட்டும் இயக்கப்படும்.
மேற்கொண்ட நாள்களில் இந்த ரயிலானது புகழூா் - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. புகழூா் - திருச்சி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் மேற்கண்ட நாள்களில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

பராமரிப்பு பணி: கேரள ரயில்கள் தாமதமாக இயக்கம்

பராமரிப்பு பணி: பாலக்காடு: திருச்செந்தூா் ரயில் பகுதியாக ரத்து

பராமரிப்புப் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



