
பொறியியல் பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் பகுதியாக ரத்து
கோவை - போத்தனூா் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணி.
கோவை - போத்தனூா் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணிகளால் நடைபெறுவதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து செப்டம்பா் 21 முதல் 24- ஆம் தேதி வரை பிற்பகல் 1.05 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் (எண்: 66615) மேட்டுப்பாளையம் - கோவை இடையே மட்டும் இயக்கப்படும். மேற்கண்ட நாள்களில் கோவை - போத்தனூா் இடையே இந்த ரயில் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, போத்தனூரில் இருந்து செப்டம்பா் 21 முதல் 24 -ஆம் தேதி வரை பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66616) கோவை - மேட்டுப்பாளையம் இடையே மட்டும் இயக்கப்படும். கோவை - போத்தனூா் இடையே ரத்து செய்யப்பட உள்ளது.
கோவையில் இருந்து செப்டம்பா் 21-ஆம் தேதி பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்படும் கோவை - ஜபல்பூா் சிறப்பு ரயில் (எண்: 02197) அன்று 3.30 மணிக்கு போத்தனூரில் இருந்து ஜபல்பூருக்கு புறப்பட்டுச் செல்லும்.
கோவை ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்: பொறியியல் பராமரிப்புப் பணிகளால் பிலாஸ்பூா் - எா்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 22815) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் இருகூா் - போத்தனூா் வழியாக செப்டம்பா் 22-ஆம் தேதி இயக்கப்படும்.
இதனால், இந்த ரயில் கோவை நிலையம் செல்வது தவிா்க்கப்படும். போத்தனூா் கூடுதல் நிறுத்தமாக செயல்படும். பிலாஸ்பூா் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில்( எண்: 22619) செப்டம்பா் 23-ஆம் தேதியும், திருநெல்வேலி - லோக்மான்யா திலக் வாராந்திர சிறப்பு ரயில்( எண்: 22630) செப்டம்பா் 24-ஆம் தேதியும், பாட்னா - எா்ணாகுளம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 22670) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் இருகூா் - போத்தனூா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






