கொடைக்கானலில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து இரண்டாம் கட்ட ஆய்வுப் பணி நிறைவடைந்துள்ளதாக நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில் முதல் கட்டமாக 43 கட்டடங்கள் மூடி "சீல்' வைக்கப்பட்டுள்ளன. மேலும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 1415 கட்டடங்கள் மீது மார்ச் 11 ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக கொடைக்கானல் பகுதிகளில் உள்ள கட்டடங்களை ஆய்வு செய்யும் பணியில் கம்பம், திண்டுக்கல், போடி, கொடைக்கானல் நகராட்சிகளைச் சேர்ந்த அதிகாரிகளும், காரைக்குடி, திருப்பூர், ஒசூர் பகுதிகளைச் சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட அலுவலர்களும் கணக்கெடுக்கும் பணியை நிறைவு செய்துள்ளனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
நீதிமன்ற உத்தரவின்படி கொடைக்கானல் பகுதிகளில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் குறித்த இரண்டாம் கட்ட ஆய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளது.
அடுத்தக்கட்டமாக விரைவில் காவல்துறை பாதுகாப்புடன் இக்கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் விஜய்!
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது!

அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்!

சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
