

கொடைக்கானலில் மீண்டும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு வாரங்களாக பரவலாக மழை பெய்தது அதன்பின் மழை குறைந்து கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் சாரல் மழையும், மிதமான மழையும் பெய்து வந்தது.
இதனால் கொடைக்கானல் மற்றும் பூம்பாறை, மன்னவனுர், குண்டாறு, கிளாவரை, வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் 5-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்ததால் பல இடங்களில் 3 நாள்களாக மின் விநியோகம் தடைபட்டது.
மரங்களை அகற்றியும், மின்கம்பிகளை சரிசெய்யும் பணியிலும் வனத்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர். இந் நிலையில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும்(நேற்று) மழை பெய்யாமல் இருந்தது. இதனைத்தொடர்ந்து இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் லேசான வெயில் நிலவியது.
அதன் பின் சுமார் இரண்டு மணி நேரம் விட்டு விட்டு மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் அன்றாடப் பணிகளில் ஈடுபட முடியாமல் போவதால் பொது மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மக்களவைத் தலைவருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் தீா்மானம் தோல்வி

12.3.1976: சென்னை போலீஸார் சீருடை மாறுகிறது

சேந்தமங்கலம், ராசிபுரத்தில் 357 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கல்

கணக்கம்பட்டி சத்குரு ஆலயத்தில் மகா மங்கள குருபூஜை பெருவிழா
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

