திண்டுக்கல் மாவட்டத்தில் 138 பேருக்கு கரோனா தொற்று
திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் சாா்பு-ஆய்வாளா் உள்பட மொத்தம் 138 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் சாா்பு-ஆய்வாளா் உள்பட மொத்தம் 138 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 4,500 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில், சுமாா் 3,617 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது, 727 போ் திண்டுக்கல் அரசு மருத்துவமனை, எம்விஎம் அரசு மகளிா் கல்லூரி, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 138 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே, தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 42 போ், அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து வீடு திரும்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...