
பாட் கம்மின்ஸ் எனும் நான்... அணியில் இணைந்த சன்ரைசர்ஸ் கேப்டன்!
சன்ரைசர்ஸ் அணியில் இணைந்த கேப்டன் பாட் கம்மின்ஸ் குறித்து...

பாட் கம்மின்ஸ். - படம்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதன் முழுநேர கேப்டன் பாட் கம்மின்ஸ் இணைந்துள்ளார். இந்தப் புகைப்படங்களை எஸ்ஆர்ஹெச் அணி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
காயம் காரணமாக இந்த ஐபிஎல் சீசனில் பாதிக்கும் மேலான போட்டிகளில் கம்மின்ஸ் விளையாடமாட்டார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அணியில் இணைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாட் கம்மின்ஸ் ( 32 வயது) காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை; மோசமான அணியின் செயல்பாட்டால் அந்த அணி குரூப் சுற்றுடன் வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.
பாட் கம்மின்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில், “திரும்ப வந்தது நன்றாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
வலைப் பயிற்சியில் பந்துவீசிவரும் பாட் கம்மின்ஸ் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இது குறித்து அவர் பேசியிருப்பதாவது:
முதுகுவலியில் இருந்து மீண்டு வருகிறேன். இப்போதைக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசுகிறேன். ஐபிஎல் விரைவில் தொடங்குகிறது. தொடக்க போட்டிகளில் நான் விளையாட மாட்டேன். ஆனால், அது நீண்ட நாளுக்கு இருக்காது.
இந்தத் தொடரின் பாதியில் களமிறங்க தயாராகி வருகிறேன். இதில் எதுவும் தவறாகப் போகவில்லை எனில் பாதிக்கும் அதிகமான போட்டிகளில் விளையாடுவேன் என்றார்.
ஆஷஸ் போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். பின்னர், டி20 உலகக் கோப்பையை புறக்கணித்தார். சன்ரைசர்ஸ் அணியில் அவருக்குப் பதிலாக, இஷான் கிஷன் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
Pat Cummins anu nenu, back again to Play With Fire ð¥ pic.twitter.com/NKLttGYqhp
— SunRisers Hyderabad (@SunRisers) March 26, 2026
Summary
Good to be back: Pat Cummins shares positive signs of recovery ahead of IPL 2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





